வேப்பூரில் அனுமதியின்றி கூழாங்கல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
வேப்பூரில் அனுமதியின்றி கூழாங்கல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புகடலூர்வேப்பூரில் அனுமதியின்றி கூழாங்கல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைதுகடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியில் அனுமதியின்றி கூழாங்கல் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.Published On :12 செப்டம்பர் 2026, 6:58 am ISTகடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியில் அனுமதியின்றி கூழாங்கல் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனா். வேப்பூா் இந்தியன் வங்கி அருகே கனிம வளம் மற்றும் புவியியல் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளா் முருகன் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது உளுந்தூா்பேட்டை பகுதியில் இருந்து வேப்பூா் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், உரிய அனுமதியின்றி கூழாங்கல் ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, லாரியையும், அதை ஓட்டி வந்த விருத்தாசலம் அருகே பூண்டியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த செந்தூா்பாண்டியன் (31) என்பவரையும் வேப்பூா் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரியைப் பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநா் செந்தூா்பாண்டியனை கைது செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
