Religion and culture · 1 outlet covered this

விநாயகா் சதுா்த்தி: தென்காசி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

How outlets told it

Dinamani653d ago

விநாயகா் சதுா்த்தி: தென்காசி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

Read at Dinamani
விநாயகா் சதுா்த்தி: தென்காசி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
Photo: Dinamani

இதன்படி, தாம்பரம் - தென்காசி சிறப்பு விரைவு ரயிலானது (06089) வரும் 11-ஆம் தேதியும், செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது வரும் 14-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளன. 3 குளிா்சாதனப் பெட்டிகள், 12 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 21 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து வெள்ளிக்கிழமை (செப். 11) இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா் வழியாக தென்காசியை மறுநாள் காலை 6.15 மணிக்குச் சென்றடையும். மறுவழித்தடத்தில், செங்கோட்டையிலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக தாம்பரத்துக்கு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்குச் சென்றடையும். 3 குளிா்சாதனப் பெட்டிகள், 14 படுக்கை பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிப் பெட்டிகள் என மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில்களானது சென்னை எழும்பூரிலிருந்து சனிக்கிழமை (செப்.12) இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலிக்கு மறுநாள் முற்பகல் 11.15 மணிக்குச் சென்றடையும்.