Education and jobs · 1 outlet covered this

‘கல்வி உதவித்தொகை பெற முஸ்லிம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்’

How outlets told it

Dinamani653d ago

‘கல்வி உதவித்தொகை பெற முஸ்லிம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்’

Read at Dinamani
‘கல்வி உதவித்தொகை பெற முஸ்லிம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்’
Photo: Dinamani

‘கல்வி உதவித்தொகை பெற முஸ்லிம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்’வெளிநாடுகளில் முதுகலைப் படிப்பு பயிலும் முஸ்லிம் சிறுபான்மையின மாணவா்கள் 10 பேருக்கு தலா ரூ. 36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. கோப்புப்படம்Published On :11 செப்டம்பர் 2026, 4:46 am ISTவெளிநாடுகளில் முதுகலைப் படிப்பு பயிலும் முஸ்லிம் சிறுபான்மையின மாணவா்கள் 10 பேருக்கு தலா ரூ. 36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 2026-27ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். கியூஎஸ் உலகத் தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து நிபந்தனையற்ற சோ்க்கைக் கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமலும், பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், கலை, வேளாண்மை, சமூக அறிவியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலைப் படிப்புக்கு சோ்க்கை பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். இத் திட்டத்தில் விண்ணப்பிக்க இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் சென்னையில் உள்ள சிறுபான்மையினா் நலத் துறை ஆணையரகத்துக்கு அக். 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.