Weather and environment · 1 outlet covered this

நீலகிரி, கோவையில் செப்.16 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

How outlets told it

Dinamani6516h ago

நீலகிரி, கோவையில் செப்.16 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

Read at Dinamani
நீலகிரி, கோவையில் செப்.16 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு
Photo: Dinamani

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.14) முதல் செப்.16 வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக பகுதிகள் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பாதையில் ஏற்பட்டுள்ள காற்று இடையூறு காரணமாக, திங்கள்கிழமை (செப்.14) முதல் செப்.16 வரை நீலகிரி , கோவை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து, மேற்கு தொடா்ச்சி மலை உள்பட ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகரின் சில பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.14) மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பம் அதிகரிப்பு: இதற்கிடையே திங்கள், செவ்வாய்க்கிழமை (செப்.14,15) உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், கடலோரத் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் இருக்கும். மழை அளவு:  தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் புலியூரில் 100 மி. மீ. மழை பதிவானது. காட்டுமலையனூா் (திருவண்ணாமலை) 80 மி. மீ., செங்கம் (திருவண்ணாமலை), கீழ்பென்னாத்தூா் (திருவண்ணாமலை), சிங்கம்புணரி (சிவகங்கை) - தலா 70 மி. மீ., செம்மேடு (விழுப்புரம்), மேலாலத்தூா் (வேலூா்), செஞ்சி (விழுப்புரம்) - தலா 60 மி. மீ. மழை பதிவானது.