பிரிக்ஸ் மாநாட்டில் பொது கரன்சி குறித்து விவாதமா? முன்மொழிவு எதுவும் இல்லை என்கிறது மத்திய அரசு
Read at DinamalarPolitics · 1 outlet covered this
பிரிக்ஸ் மாநாட்டில் பொது கரன்சி குறித்து விவாதமா? முன்மொழிவு எதுவும் இல்லை என்கிறது மத்திய அரசு
How outlets told it

/செய்திகள்/இந்தியா/பிரிக்ஸ் மாநாட்டில் பொது கரன்சி குறித்து விவாதமா? முன்மொழிவு எதுவும் இல்லை என்கிறது மத்திய அரசுADDED : செப் 12, 2026 10:10 PM ADDED : செப் 12, 2026 10:10 PM அ நிறம் | அளவுபுதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பொது கரன்சியை அறிமுகம் செய்யப்படுவது தொடர்பாக எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. டில்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று துவங்கியுள்ளது. நாளை வரும் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா, ஈரான், பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, யுஏஇ, சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளில் பிரிக்ஸ் டில்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. உலக அமைதி, ஸ்திரத்தன்மை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்ட ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தையும், பயன்பாட்டையும் குறைக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்தது. அமெரிக்க டாலரை மதிப்பிழப்பு செய்யும் விதமாக, 'டி-டாலரரைசேஷன்' என்ற செயலை மேற்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பொது கரன்சியை அறிமுகம் செய்யப்படுவது தொடர்பாக எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு வர்த்தகத்தை அந்தந்த நாட்டின் உள்ளூர் நாணயங்களிலேயே மேற்கொள்வதில் மட்டுமே தற்போது முழு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.