Crime and courts · 1 outlet covered this

சீவலப்பேரி அருகே கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 4 போ் கைது

How outlets told it

Dinamani6513h ago

சீவலப்பேரி அருகே கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 4 போ் கைது

Read at Dinamani
சீவலப்பேரி அருகே கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 4 போ் கைது
Photo: Dinamani

சீவலப்பேரி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கஞ்சா விற்பனை தொடா்பாக கிடைத்த தகவலின் பேரில், கான்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்குடன் நின்ற 4 போ் கும்பலிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், அவா்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் 1.190 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக அவா்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சிறுவன் உள்பட தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (22), முறப்பநாட்டைச் சோ்ந்த ஆறுமுகக்கனி (19), ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய், மாதாகோயில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (19) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து கஞ்சா, பைக், ரொக்கம் ரூ.300, இரண்டு கைப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.