முதியோர் உதவித்தொகை 15-ந் தேதி உறுதியாக வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
Read at Daily ThanthiReligion and culture · 1 outlet covered this
முதியோர் உதவித்தொகை 15-ந் தேதி உறுதியாக வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
How outlets told it

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள காளியப்பம்பாளையத்தில் வரு வாய்த்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால் கல்வித்து றையில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்படவில்லை. 5 லட்சம் பேருக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த திட்டத்துக்கு மத்திய அரசு பெயரை மாற்றி இருக்கிறது. இதேபோல் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என ஏறத்தாழ 27 ஆயிரத்து 412 பேருக்கு இன்னும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறோம், விடுமுறை நாட்கள் வந்துவிட்டதால் விநா யகர் சதுர்த்தி முடிந்து, மறுநாள் (அதாவது வருகிற 15-ந் தேதி) வழங்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தேர்தலை பொறுத்தவரை த. வெ. க. மாபெரும் வெற்றி பெறும். நாம் எங்கே சென்றாலும் அங்கே வெற்றிதான்.
மற்ற தொகுதிகளுக்கு வருகிற 28-ந் தேதி அன்று தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள். தீர்ப்பு கிடைத்தவுடன், தேர்தல் ஆணையம் குறிப் பிட்ட நாளில் தேர்தலை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
