திருநெல்வேலி: இந்த ஆண்டில் இதுவரை 103 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Read at Daily ThanthiCrime and courts · 1 outlet covered this
திருநெல்வேலி: இந்த ஆண்டில் இதுவரை 103 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
How outlets told it

Published on: 12 Sep 2026, 4:43 amதிருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 103 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். எஸ். பி. உத்தரவுதிருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எஸ். பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி உத்தரவின் பேரில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது காவல்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்சொன்ன வாலிபர் கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மேற்சொன்ன வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ். பி. யிடம் பரிந்துரை செய்தார். வாலிபர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைதுஅதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ். பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் உத்தரவின்படி, மேற்சொன்ன வாலிபர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 103 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
