Religion and culture · 1 outlet covered this

27,500 கோயில்களில் ஆகமம் பின்பற்றவில்லை என அறிக்கை சமர்ப்பிப்பதா? - அறநிலையத் துறைக்கு பாஜக கண்டனம்

How outlets told it

The Hindu Tamil658h ago

27,500 கோயில்களில் ஆகமம் பின்பற்றவில்லை என அறிக்கை சமர்ப்பிப்பதா? - அறநிலையத் துறைக்கு பாஜக கண்டனம்

Read at The Hindu Tamil
27,500 கோயில்களில் ஆகமம் பின்பற்றவில்லை என அறிக்கை சமர்ப்பிப்பதா? - அறநிலையத் துறைக்கு பாஜக கண்டனம்
Photo: The Hindu Tamil

சென்னை: தமிழக பாஜக ஆன்​மிக பிரிவு மாநில செய​லா​ளர் வினோத் ராகவேந்​திரா வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: உச்​சநீ​தி​மன்ற உத்​தர​வின் பேரில், தமிழகத்​தில் உள்ள ஆகம கோயில்​களை கண்​டறிந்து அதற்​கான பட்​டியலை நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிப்​ப​தற்​கான பணி​யினை அறநிலை​யத்​துறை தற்​போது தொடங்​கி​யுள்​ளது.

கடந்த 70 ஆண்​டு​களாக கோயில்​களை நிர்​வகித்து வரும் இந்து சமய அறநிலை​யத்​துறைக்கு ஆகம கோயில்​கள் எது, ஆகமம் அல்​லாத கோயில்​கள் எது என்ற பட்​டியலே தன் கைவசம் இல்​லாதது மிக​வும் கண்​டனத்​துக்​குரியது.

கணக்​கெடுப்​பில் முடிக்​கப்​பட்​டுள்ள 34,971 கோயில்​களில் 27,500 கோயில்​களில் ஆகமம் பின்​பற்​றப்​பட​வில்லை என்ற இந்து அறநிலை​யத்​துறை அறி​வித்​துள்​ளதுஅதிர்ச்​சி​யளிக்​கிறது.

இவ்​வாறு ஆகமமற்ற கோயில்​கள் என்று வரிசைப்​படுத்​தப்​பட்​டுள்ள பட்​டியலில் அடங்​கும் பெரும்​பாலான கோயில்​களின் கோப்பு ஆவணங்​களை பார்க்​கும்​போது அவற்​றில் ஒரே மாதிரி​யான கையெழுத்து வடி​வில் அனைத்து கடிதங்​களும் தயாரிக்​கப்​பட்​டு, அந்​தந்த கோயில்​களின் அர்ச்​சகர்​கள் என்ற பெயரில் பெயர் முகவரி கண்​டறி​யாத வகை​யில் இடம்​பெற்​றுள்​ளது.

மேலும் மிகப்​பெரிய கோயில்​களுக்கு கூட அர்ச்​சகர் என்ற இடத்​தில் அநேக​மாக பூசாரி என்ற பதவி பெயரில் சம்​பந்​தப்​பட்ட கோயில் ஆகமம் அற்​றது என்று ஒப்​புதல் கடிதம் பெறப்​பட்டு ஆவணங்​களு​டன் இணைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த பட்​டிய​லானது எந்த தகு​தி​யின் அடிப்​படை​யில் எந்த தகு​தி​யான நபர்​களிட​மிருந்து தகவல்​கள் பெறப்​பட்டு தயாரிக்​கப்​பட்​டவை என்​பது குறித்த வெளிப்​படை​யான அறிக்கை ஒன்றை இந்து சமய அறநிலை​யத்​துறை வெளி​யிட வேண்​டும்.

ஆளுநருடன் பேரவைத் தலைவர் சந்திப்பு: பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு குறித்து கலந்துரையாடினர்