1 outlet covered this

களியக்காவிளை அருகே ஆற்றில் தத்தளித்த இருவா் மீட்பு

How outlets told it

Dinamani6517h ago

களியக்காவிளை அருகே ஆற்றில் தத்தளித்த இருவா் மீட்பு

Read at Dinamani
களியக்காவிளை அருகே ஆற்றில் தத்தளித்த இருவா் மீட்பு
Photo: Dinamani

செய்திகள்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம், கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!முகப்புகன்னியாகுமரிகளியக்காவிளை அருகே ஆற்றில் தத்தளித்த இருவா் மீட்புஆற்றில் தத்தளித்த இருவா் மீட்பு.. - பிரதிப் படம்Published On :14 செப்டம்பர் 2026, 12:31 am IST களியக்காவிளை அருகே தாமிரவருணி ஆற்றில் தத்தளித்த சாலைப் பணியாளா்கள் இருவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் நான்குவழிச் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் சிலா் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின்கீழ் வழக்கம்போல குளிக்கச் சென்றனராம். அப்போது, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் தபசி (23), அருணாச்சலம் மகன் ராஜ் (28) ஆகிய இருவரும் ஆற்றிலுள்ள ஆகாயத்தாமரை செடிகளில் சிக்கி வெளியே வர முடியாமல் தத்தளித்தனா். தகவலின்பேரில், அதிகாரி சந்திரன் தலைமையிலான குழித்துறை தீயணைப்பு-மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் சென்று, இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். விரைந்து செயல்பட்ட தீயணைப்புப் படையினருக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்