Crime and courts · 1 outlet covered this

ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

How outlets told it

Dinamalar652d ago

ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

Read at Dinamalar
ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
Photo: Dinamalar

/செய்திகள்/தமிழகம்/ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டிUPDATED : செப் 12, 2026 10:52 AM ADDED : செப் 12, 2026 10:05 AM UPDATED : செப் 12, 2026 10:52 AM ADDED : செப் 12, 2026 10:05 AM அ நிறம் | அளவுமதுரை: ''ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. வேற ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பது 30வருடம், 40 வருடம் சர்ச்சை '' என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது. மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதற்கு ஆதாரம் இருக்கா; கைதான எல்லோரும் ஆதாரம் வைத்து இருக்கிறார்கள். ஒருவர் கைது ஆகியிருந்தால் டிடென்ஷன் காப்பி காட்ட வேண்டும்; டிடென்ஷன் காப்பி இல்லாத ஒரே தியாகி இவராக தான் இருப்பார் போல. தியாகியா? இவரை நீங்கள் திரும்ப, திரும்ப தியாகியாக ப்ரொஜெக்ட் பண்றதுனால ஒரு பிரயோஜனமும் இல்லை. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. வேற ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பது 30வருடம், 40 வருடம் சர்ச்சை. இதுவரைக்கும் அவர்களால் ஒரு டிடென்ஷன் காப்பி கூட கொடுக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய தியாகி கைது செய்யப்பட்டார் என்றால் எதுக்கு டிடென்ஷன் காப்பி அழிக்கப்பட்டது. எல்லோரும் சொல்கிற குற்றச்சாட்டு 1989ல் அவர் ஆட்சி காலம் வந்த பிறகு அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்க கூடாது என்று அழித்துவிட்டார்கள் என்று சொல்கிறாங்க. ஆதாரமில்லை மிசாவில் கைது செய்யப்பட்ட எல்லோருக்கும் ஆதாரம் இருக்கிறது; ஸ்டாலினுக்கு மட்டும் ஆதாரம் இல்லை. சட்டசபையில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர். மக்களுக்கு தெளிவாக தெரியும்; இரண்டு இடைத்தேர்தலில் இவர்கள் வந்து திருமங்கலம் பார்முல்லான்னு சொல்லி எப்படி 100 கோடி, 200 கோடி ரூபாய் கொண்டு வந்தாங்களோ. எத்தனை 100 கோடி ரூபாய் கொண்டு வந்தாலும் மக்கள் அதை வாங்கிட்டு, என்ன செய்ய வேண்டுமோ, அதை தெளிவாக செய்வார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இவர்கள் எல்லாம் எங்கே இருந்து கொள்ளை அடித்தார்கள்; எத்தனை லட்சம் கோடி ரூபாய் தமிழகத்தில் இருந்து கொள்ளை அடித்தார்கள். டெபாசிட் கிடைக்காது அத்தனை லட்சம் கோடி ரூபாயில் இருந்து இன்றைக்கு 100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாயை வைத்து கொண்டு ஒவ்வொரு இடைத்தேர்தலுக்கும் வருவார்கள். இவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். இடைத்தேர்தலில் இரண்டு கட்சிக்கும், திமுகவுக்கும், அதிமுகவுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது, அது நல்லா தெரியும். மக்கள் அவர்களை தமிழகத்தில் இருந்து தூக்கி எறிந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. தமிழக முதல்வர் லண்டனுக்கு சென்று இருப்பது தொழிற்துறைக்கான ஒரு கூட்டம் ஒவ்வொரு நாளும் நிறைய தொழில்துறையினரை சந்திக்கிறார். முதலீட்டு ஒப்பந்தம் குறித்து சந்திப்பு முடிந்த பிறகு அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு