Religion and culture · 1 outlet covered this

தென்கலை - வடகலை மோதலும் துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களும்... திருவல்லிக்கேணியின் அறியப்படாத பக்கம்..!

How outlets told it

News18 Tamil6545h ago

தென்கலை - வடகலை மோதலும் துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களும்... திருவல்லிக்கேணியின் அறியப்படாத பக்கம்..!

Read at News18 Tamil
தென்கலை - வடகலை மோதலும் துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களும்... திருவல்லிக்கேணியின் அறியப்படாத பக்கம்..!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeதென்கலை - வடகலை மோதலும் துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களும்... திருவல்லிக்கேணியின் அறியப்படாத பக்கம்..!Reported by:Sundaravadivel EPublished by:Muthu KathanLast Updated:Sep 12, 2026 6:39 PM ISTதுறவிகள் மற்றும் சமய குருமார்ககளுக்கு வழங்க வேண்டிய மரியாதை, கோயில் பணியாளர்களுக்கான பங்கீடு போன்ற நடைமுறைகளும் வரையறுக்கப்பட்டன.1/5சென்னையின் பழமையான பகுதிகளில் ஒன்றான திருவல்லிக்கேணி, பல நூற்றாண்டுகளாகவே வைணவ சமயத்தின் முக்கியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் மையத்தில் அமைந்துள்ள பார்த்தசாரதி சுவாமி கோயில், பல்லவர் காலத்துடன் தொடர்புடைய தொன்மையான வரலாற்றைக் கொண்டது. காலப்போக்கில் திருவல்லிக்கேணி ஆங்கிலேயர்களின் ஆட்சி கட்டுப்பாட்டுக்குள் வந்தபோதும், கோயிலின் வழிபாட்டு மரபுகளும் நிர்வாக நடைமுறைகளும் தொடர்ந்து உள்ளூர் சமூகங்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கின.2/5பார்த்தசாரதி கோயிலில் தென்கலை, வடகலை வைணவர்களிடையே வழிபாட்டு முறை, பிரபந்தம் ஓதும் உரிமை, சடங்கு முன்னுரிமை உள்ளிட்டவற்றில் மோதல்கள் ஏற்பட்டன. வெளிப்படையாக இது சடங்கு தொடர்பான விவகாரமாக இருந்தாலும், அதன் பின்னணியில் மரபு, சமூக கௌரவம், அதிகாரம், கோயில் நிர்வாக உரிமை ஆகியவை இருந்தன. மோதல்கள் பொது அமைதியைப் பாதிக்கும் நிலையை அடைந்தபோது, கம்பெனி நிர்வாகம் இதில் தலையிட வேண்டிய சூழல் உருவானது.3/51754-ல் மோதல் கம்பெனி கவுன்சில் முன் சென்றது. பார்த்தசாரதி சன்னதியில் தென்கலையினர் ‘ஸ்ரீசைலேச தயாபாத்திரம்’ ஓதவும், தெலிங்க சிங்கர் சன்னதியில் வடகலையினர் ‘ராமானுஜ தயாபாத்திரம்’ ஓதவும் சமரசம் முன்வைக்கப்பட்டது. 1766-ல் இந்த முடிவு மீண்டும் உறுதி செய்யப்பட்டது. 1780-ல் பிரச்சினை மீண்டும் எழுந்தபோது, ஆளுநர் ஜான் வைட்ஹில் கவனத்துக்கு சென்றது; பாதுகாப்புக்காக டவுன் மேஜர் மற்றும் சிப்பாய்கள் அனுப்பப்பட்டனர்.4/5மோதல்கள் தொடர்ந்து நீடித்த நிலையில், 1800-ம் ஆண்டுக்கான கம்பெனி விதிமுறைகள் கோயிலின் சடங்குகளின் நுணுக்கங்களையும் பதிவு செய்தன. கோஷ்டியில் தீர்த்தம், பிரசாதம் வழங்கும்போது யாருக்கு முன்னுரிமை, துறவிகள் மற்றும் சமய குருமார்ககளுக்கு வழங்க வேண்டிய மரியாதை, கோயில் பணியாளர்களுக்கான பங்கீடு போன்ற நடைமுறைகளும் வரையறுக்கப்பட்டன. இதன் மூலம் சடங்கு விவகாரங்கள் வெறும் மரபாக இல்லாமல், நிர்வாக விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டன.5/5கம்பெனி காலத்தில் தொடங்கிய தலையீட்டின் தாக்கம் பின்னரும் தொடர்ந்தது. 1924-ல் மதராஸ் உயர் நீதிமன்றம் உருவாக்கிய நிர்வாகத் திட்டத்தின் கீழ், தர்மகர்த்தாக்கள் மற்றும் மேற்பார்வை வாரியம் மூலம் கோயில் நிர்வாகம் முறைப்படுத்தப்பட்டது. இதனால் திருவல்லிக்கேணி கோயில் வரலாறு, தென்கலை–வடகலை மோதலைத் தாண்டி, காலனித்துவ அரசு, மத நிறுவனம், சட்டம் மற்றும் சமூக அதிகாரம் சந்திக்கும் முக்கிய வரலாற்றுச் சம்பவமாக மாறியது