ஒருவார காலம் லண்டன் பயணம் செல்லும் முதலமைச்சர் விஜய்..!
Read at Polimer NewsReligion and culture · 1 outlet covered this
ஒருவார காலம் லண்டன் பயணம் செல்லும் முதலமைச்சர் விஜய்..!
How outlets told it

முதலமைச்சர் விஜய் ஒரு வாரகால பயணமாக வியாழக்கிழமை இரவு லண்டன் புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொள்ளும் விஜய், வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் சென்றடைவார் எனவும், அங்கிருந்து லண்டன் புறப்படுவார் எனவும் கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்த நிலையில், அது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாகவும், துபாயில் கார் ரேசில் ஈடுபட்டுள்ள நடிகர் அஜித்குமாரை முதலமைச்சர் விஜய் சந்திக்கவுள்ளதாகவும், பின்னர் லண்டனில் தங்கியிருந்து தொழில் முதலீட்டாளர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. லண்டனில் தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திக்கும் விஜய் வரும் 16 அல்லது 17-ந்தேதி சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
