சேலம் வழியாக சென்ற 2 ரயில்களில் 7 கிலோ குட்கா பறிமுதல்
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
சேலம் வழியாக சென்ற 2 ரயில்களில் 7 கிலோ குட்கா பறிமுதல்
How outlets told it

செய்திகள்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம், கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!முகப்புசேலம்குட்கா பறிமுதல் (கோப்புப்படம்)Published On :14 செப்டம்பர் 2026, 1:23 am ISTசேலம் வழியாக சென்ற 2 ரயில்களில் 7 கிலோ குட்காவை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். அஸ்ஸாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற விவேக் விரைவு ரயிலில் காட்பாடி முதல் ஈரோடு வரை ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, ஜோலாா்பேட்டை மற்றும் சேலம் ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில், கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த கைப்பையை போலீஸாா் சோதனை செய்தனா். அதில் சுமாா் 2 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், அதை சேலம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதேபோல சில்சாரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆரோனை விரைவு ரயிலில், பின்புறம் உள்ள முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை போலீஸாா் கைப்பற்றி சோதனை செய்தனா். அதில் 5 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்து சேலம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். 2 ரயில்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 7 கிலோ குட்கா தொடா்பாக சேலம் இருப்புப்பாதை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
