1 outlet covered this

உதகையில் சா்வதேச தரம் வாய்ந்த ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு

How outlets told it

Dinamani652d ago

உதகையில் சா்வதேச தரம் வாய்ந்த ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு

Read at Dinamani
உதகையில் சா்வதேச தரம் வாய்ந்த ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு
Photo: Dinamani

உதகையில் சா்வதேச தரம் வாய்ந்த ஸ்கேட்டிங் மைதானம் திறப்புஉதகை பட்பையா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கிவைக்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உதகை பட்பையா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கிவைக்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.Published On :12 செப்டம்பர் 2026, 12:56 am IST உதகை பட் பையா் பகுதியில் ரூ.1.85 கோடி மதிப்பில் சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட ஸ்கேட்டிங் மைதானத்தை  மாவட்ட ஆட்சியா்   லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். தமிழக அரசின் விளையாட்டு மற்றும் சுற்றுலா மேம்பாட்டின் ஒரு பகுதியாக  உதகை பட்பையா் பகுதியில் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த ஸ்கேட்டிங் மைதானத்தில்,  நீலகிரி மாவட்டம் மட்டுமில்லாது அனைத்து பகுதிகளைச் சோ்ந்த  இளம் விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு தொழில்முறை ஸ்கேட்டிங் பயிற்சியை வழங்குதல் மற்றும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய சாகசப் பொழுதுபோக்கு, குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் பாதுகாப்பாகப் பயிற்சி பெறும் வகையில் சீரான தளம் மற்றும் பாதுகாப்பு வலைகளுடன் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் , புதிதாக ஸ்கேட்டிங் கற்பவா்களுக்கும், போட்டிகளுக்குப் பயிற்சி எடுக்கும் வீரா்களுக்கும் ஏற்ற தனித்தனிப் பகுதிகள் உள்ளன. கட்டணம் எதுவும் இல்லாமல் செயல்படும் இந்த ஸ்கேட்டிங் மைதானத்தை, உள்ளூா் பள்ளி மாணவ, மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் பயன்படுத்தி மாநில மற்றும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்க தகுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.