ரூ.2 கோடி பட்ஜெட்... ரூ.200 கோடி வசூல்! - ‘ஹனுமன் அன்ஸ்’ அசத்தல்
Read at The Hindu TamilCinema and entertainment · 1 outlet covered this
ரூ.2 கோடி பட்ஜெட்... ரூ.200 கோடி வசூல்! - ‘ஹனுமன் அன்ஸ்’ அசத்தல்
How outlets told it

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆன்மிக குருவும் ஹனுமன் பக்தருமான நீம் கரோலி பாபா என்ற மகாராஜ் ஜியின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகத் திரைப்படம் ‘ஹனுமன் அன்ஸ்’.
இந்தியில் உருவாகியுள்ள இப்படத்தில் ஷோபினவ் சத்யா, விஹான் ஷெட்ஜே, சந்தன் ஆனந்த், பூர்ணிமா திவாரி, அனில் கே. ரஸ்தோகி மற்றும் குல்ஷன் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். விஷால் சதுர்வேதி தயாரித்து இயக்கியுள்ள இப்படம் நம்பிக்கை, பக்தி, அற்புதங்கள் மற்றும் ஆன்மிகத்தின் மூலம் நம்பிக்கையைப் பெறுவது போன்ற உணர்வுகளைச் சொல்கிறது.
ஆக.7-ல் வெளியான இப்படம் முதல் வாரம் அதிக பார்வையாளர்கள் இல்லாமல் சுமாரான வசூலைப் பெற்றது. பிறகு வரவேற்பைப் பெற்று வருகிறது. ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 36 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் மட்டும் ரூ.205.15 கோடியை வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது.
விரைவில் வெளிநாடுகளிலும் இப்படம் வெளியாக இருக்கிறது. இதனால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள். இதுவரை இப்படம் பட்ஜெட்டை விட 100 மடங்கு வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35
