Crime and courts · 1 outlet covered this

600 போதை மாத்திரைகள் பறிமுதல் : இளைஞா் கைது

How outlets told it

Dinamani6516h ago

600 போதை மாத்திரைகள் பறிமுதல் : இளைஞா் கைது

Read at Dinamani
600 போதை மாத்திரைகள் பறிமுதல் : இளைஞா் கைது
Photo: Dinamani

பெரியகுளத்தில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 600 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை கல்லாா் பகுதியில் உதவி ஆய்வாளா் ஜான் செல்லத்துரை தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிவமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அப்போது இருவா் அங்கிருந்து தப்பி ஓடினா். மேலும், போலீஸில் சிக்கிய ஆண்டிபட்டி முத்தனம்பட்டியைச் சோ்ந்த ஒச்சு மகன் சஞ்சய் (21) வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 600 போதை மாத்திரைகளை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய பெரியகுளம் வடகரையைச் சோ்ந்த நிஷாந்த், தேனி அரப்படித்தேவன்பட்டியைச் சோ்ந்த மனோஜ்குமாா் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.