சாலமன் பாப்பையாவிற்கு அரசு மரியாதை? அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
Read at Daily ThanthiPolitics · 1 outlet covered this
சாலமன் பாப்பையாவிற்கு அரசு மரியாதை? அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
How outlets told it

Published on: 11 Sep 2026, 5:08 pmமதுரைமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் எளிய குடும்பத்தில் பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற நடுவராக பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்ற சாலமன் பாப்பையா, சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்களால் மக்களின் பேரன்பைப் பெற்றார். 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருந்தார். எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், பதிப்பாசிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவராக சாலமன் பாப்பையா திகழ்ந்தார். மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், தனது 90-ஆவது வயதில் காலமானார். தமிழ்ப்புலமையால் உலகத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த சாலமன் பாப்பையாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலமன் பாப்பையாவின் மறைவிற்கு முதலமைச்சர் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். மதுரையில் சாலமன் பாப்பையா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-``சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு. சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதை வழங்குவது தொடர்பாக பேசிவிட்டு சொல்கிறேன் என பதில் அளித்துவிட்டு சென்றார்.
