சேலம் சரகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 37 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்..!
Read at Daily Thanthi1 outlet covered this
சேலம் சரகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 37 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்..!
How outlets told it

Published on: 13 Sep 2026, 2:32 amசேலம், சேலம் சரகத்தில் விதிமுறைகளை மீறி இயக்கிய 37 ஆம்னி பஸ்களுக்கு ரூ.32 லட்சம் அபராதம் விதித்து போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கூடுதல் கட்டணம்விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரு கின்றனர். இதையொட்டி சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் விதிமுறைகளை மீறி ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வருகின்றன. இந்த நிலையில், சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா, கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவ லர் தியாகராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சென்னை, பெங்க ளூரூக்கு சென்ற ஆம்னி பஸ்களில் ஆய்வு செய்தனர். அப்போது, சில பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கியது தெரியவந்தது. இதேபோல், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் ஆம்னி பஸ்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை மேற்கொண்ட னர். சேலம், நாமக்கல்லில் 23 ஆம்னி பஸ்களும், தர்மபுரி, கிருஷ்ணகிரி யில் 14 ஆம்னி பஸ்களும் என மொத்தம் 37 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விநா யகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பஸ்க ளின் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள் ளனர்.
