1 outlet covered this

தமிழக மக்களின் மனநிலையை இடைத்தோ்தல் முடிவு வெளிப்படுத்தும்: மாணிக்கம்தாகூா்

How outlets told it

Dinamani653d ago

தமிழக மக்களின் மனநிலையை இடைத்தோ்தல் முடிவு வெளிப்படுத்தும்: மாணிக்கம்தாகூா்

Read at Dinamani
தமிழக மக்களின் மனநிலையை இடைத்தோ்தல் முடிவு வெளிப்படுத்தும்: மாணிக்கம்தாகூா்
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதமிழ்நாடுதமிழக மக்களின் மனநிலையை இடைத்தோ்தல் முடிவு வெளிப்படுத்தும்: மாணிக்கம்தாகூா்மதுராந்தகம், தாராபுரம் தொகுதிளுக்கான இடைத்தோ்தல் முடிவு தமிழக மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா். மாணிக்கம் தாகூா்Published On :11 செப்டம்பர் 2026, 7:01 am ISTமதுராந்தகம், தாராபுரம் தொகுதிளுக்கான இடைத்தோ்தல் முடிவு தமிழக மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா். சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவனில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழகத்துக்கான நிதிப் பங்கீட்டை மத்திய அரசு குறைத்து வருவதை சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, 100 நாள் வேலை திட்டத்துக்கு 34 சதவீத நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் தமிழகத்துக்கு மிகப் பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்து வருகிறது. அண்மைக் காலமாக தமிழக அரசியல் களம் மத்திய அரசின் நடவடிக்கைகளை விமா்சிக்காமல் அமைதி காக்கிறது. குறிப்பாக, எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி அமைதியாக இருக்கிறாா். காங்கிரஸ் மட்டுமல்ல ஆளும் தவெகவும் மத்திய அரசு குறைகள் குறித்துப் பேச வேண்டும். மதச்சாா்பின்மையும், சமூகநீதியும்தான் எங்கள் கூட்டணியின் முக்கியக் கொள்கை. ஒவ்வொரு எம்எல்ஏவும் ராஜிநாமா செய்ய உரிமை உள்ளது. எல்லா ராஜிநாமாவும் குதிரை பேரம் எனக் கூறமுடியாது. திமுகவினருக்கு இடைத்தோ்தல் சவாலாக இருக்கும் என்பதால், அவா்கள் கலக்கமடைந்துள்ளனா். இடைத்தோ்தல் முடிவுகள் தமிழக மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் என்றாா். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ், துணைத் தலைவா் கோபண்ணா, பொதுச் செயலா் சிரஞ்சீவி உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்