Civic issues · 1 outlet covered this

அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்

How outlets told it

அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்
Photo: Polimer News

வயது முதிர்வால் காலமான தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல், மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஞானஒளிவுபுரத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சுட்டுக்கோப்பு சாலையில் உள்ள மதுரை வெப் தேவாலயத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு நடைபெற்ற இறுதிச்சடங்கு வழிபாட்டில், குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர், அங்கிருந்து அவரது உடல், தத்தனேரி மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அமைச்சர்கள் நிர்மல் குமார், விஸ்வநாதன், எம். எல். ஏ முஸ்தபா, மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் குமார், காவல் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அரசு மரியாதையுடன், சாலமன் பாப்பையா உடல் தகனம் செய்யப்பட்டது.