Crime and courts · 1 outlet covered this

சென்னையில் நேற்று இரவு 70 ரவுடிகள் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை

How outlets told it

Daily Thanthi993d ago

சென்னையில் நேற்று இரவு 70 ரவுடிகள் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை

Read at Daily Thanthi
சென்னையில் நேற்று இரவு 70 ரவுடிகள் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை
Photo: Daily Thanthi

Published on: 11 Sep 2026, 7:10 amசென்னை, சென்னை திருவொற்றியூர், பெசன்ட் நகரில் சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு தொடர்பான கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் தற்போது காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதோடு, ரவுடிகள், குற்றவழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், நேற்று ஒரே இரவில் சுமார் 70 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிறப்பு கண்காணிப்பு மூலம் நேற்றிரவு முதல் ரவுடிகளை கைது செய்வதற்கான அதிரடி நடவடிக்கையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.