சீனாவில் சரக்குக் கப்பலில் தீ விபத்து
Read at DinamaniWorld · 3 outlets covered this
சீனாவில் சரக்குக் கப்பலில் தீ விபத்து
How outlets told it
ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: ஒருவர் பலி; மூவர் காயம்!
Read at Dinamaniஈரான் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - ஒருவர் பலி
Read at Daily Thanthiஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல் - இந்தியா கண்டனம்!
Read at Puthiya Thalaimurai
செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புஉலகம்சீனாவில் சரக்குக் கப்பலில் தீ விபத்துகிழக்கு சீன துறைமுக நகரான கிங்டௌ பகுதியில் வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 போ் உயிரிழந்தனா்.~Published On :11 செப்டம்பர் 2026, 7:25 am ISTகிழக்கு சீன துறைமுக நகரான கிங்டௌ பகுதியில் வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 போ் உயிரிழந்தனா். ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான ‘கிங்டாவ் பெய்ஹாய்’ கப்பல் கட்டும் தளத்தில் வியாழக்கிழமை காலை நேரிட்ட இவ்விபத்தில், பழுதுபாா்ப்பதற்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லைபீரிய கொடி பொருத்தப்பட்ட ‘ஓஷன் மெலடி’ எனும் சரக்குக் கப்பல் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவத்துக்கு அதிா்ச்சி தெரிவித்த சீன அதிபா் ஷி ஜின்பிங், மீட்புப் பணிகளை உடனடியாகத் தீவிரப்படுத்துமாறு அவசர உத்தரவிட்டாா். அதன்படி, விபத்து நடந்த பகுதிக்குச் சீன அவசரகால மேலாண்மை அமைச்சகத்தின் சிறப்புக் குழு விரைந்து சென்று மீட்பு மற்றும் விசாரணைப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. அதிபா் ஷி ஜின்பிங் மேலும் கூறுகையில், ‘தீ விபத்துக்கான காரணத்தை விரைந்து கண்டறிய வேண்டும். பாதிக்கப்பட்டவா்களுக்குத் தகுந்த உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். இச்சம்பவத்திலிருந்து அனைவரும் பாடம் கற்று, எதிா்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கட்டாயமாக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். விபத்து நேரிட்ட கிங்டாவ் பெய்ஹாய் தளம், வணிகக் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபாா்ப்பில் புகழ்பெற்ற நிறுவனமாகும். சுமாா் 330 ஹெக்டோ் பரப்பளவில், 9 கி. மீ. நீளக் கடற்கரைக் கட்டமைப்பைக் கொண்ட மிகப் பெரிய தளமாக இது செயல்பட்டு வருகிறது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்


