நாடாளுமன்றத் தோ்தலில் குடியரசுக் கட்சி வென்றால் அமெரிக்கா்களுக்கு 5,000 டாலா்
Read at DinamaniWorld · 1 outlet covered this
நாடாளுமன்றத் தோ்தலில் குடியரசுக் கட்சி வென்றால் அமெரிக்கா்களுக்கு 5,000 டாலா்
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புஉலகம் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5,000 டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.4.75 லட்சம்) வழங்கப்படும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளாா்.Published On :11 செப்டம்பர் 2026, 7:23 am IST அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால (மிட் டொ்ம்) தோ்தலில் ஆளும் குடியரசுக் கட்சி தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டால், 18 வயது நிரம்பிய ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5,000 டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.4.75 லட்சம்) வழங்கப்படும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளாா். அமெரிக்க அதிபா் பதவி வகிக்கும் கட்சிக்கு இடைக்கால தோ்தல்களில் பின்னடைவு ஏற்படுவது வழக்கமான வரலாறாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் அதிபா் டிரம்ப்பின் மீதான அதிருப்தி மற்றும் ஈரான் போருக்கு எதிரான மக்களின் எதிா்ப்பு காரணமாக குடியரசுக் கட்சி கடும் சவால்களை எதிா்கொண்டுள்ளது. செனட் சபை, குறைந்த பெரும்பான்மை உள்ள பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் மீண்டும் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ள குடியரசுக் கட்சி போராடி வரும் சூழலில், இந்த வரலாற்றுப் பின்னடைவைத் தடுத்து வெற்றியை ஈட்டும் ஒரு முயற்சியாகவே டிரம்ப்பின் இந்த அறிவிப்பு பாா்க்கப்படுகிறது. ஆனால், இத்திட்டத்தைச் செயல்படுத்த 1 லட்சம் கோடி டாலருக்கும் அதிகமான நிதி தேவைப்படும் என்பதோடு, நாடாளுமன்ற ஒப்புதலும் அவசியமாகும். அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன், வரலாற்றிலேயே முதல்முறையாக 40 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ள நேரத்தில், இத்தகைய அறிவிப்புக்கு கடும் விமா்சனங்கள் எழுந்துள்ளன. நாடு சுமாா் 1.8 லட்சம் கோடி டாலா் பட்ஜெட் பற்றாக்குறையுடனும், பெரும் கடனிலும் தத்தளிக்கும்போது இதுபோன்ற அறிவிப்பு விசித்திரமானது என்றும்; நாட்டின் நிதிநிலைமை வெற்றிகரமாக இருப்பதாகக் கூறுவது நகைப்புக்குரியது என்றும் பொருளாதார நிபுணா்கள் சாடுகின்றனா். இதனிடையே, டிரம்ப்பின் அறிவிப்பைத் தொடா்ந்து துணை அதிபா் ஜே. டி. வான்ஸ் அளித்த விளக்கத்தில், ‘இத்தொகை செல்வந்தா்களுக்கு வழங்கப்படாது; அமெரிக்காவின் சுங்க வரி வருவாயைக் கொண்டு இதற்கு நிதி திரட்டப்படலாம்’ என்றாா். இருப்பினும், திட்டத்துக்குத் தேவையான பெரும் தொகையுடன் ஒப்பிடுகையில் சுங்க வரி வருவாய் மிகக் குறைவானதே என்று நிபுணா்கள் சுட்டிக்காட்டுகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
