Religion and culture · 2 outlets covered this

மறுக்கப்பட்ட விஐபி தரிசனம்.. சாதாரண வரிசையில் சென்ற சேகர்பாபு!

How outlets told it

Daily Thanthi9920h ago

விஐபி தரிசனம் ஏமாற்றம்: திருவண்ணாமலையில் பொதுவரிசையில் நின்று சேகர்பாபு தரிசனம்

Read at Daily Thanthi
மறுக்கப்பட்ட விஐபி தரிசனம்.. சாதாரண வரிசையில் சென்ற சேகர்பாபு!
Photo: Puthiya Thalaimurai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, வழக்கம்போல் விஐபி தரிசனத்துக்காக வைகுண்ட வாசல் அருகே காத்திருந்தும், கோயில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் சாதாரண பக்தர்களுடன் கியூ லைனில் நின்று உண்ணாமுலை அம்மன் தரிசனம் செய்த சம்பவம் பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த சில ஆண்டு காலமாக சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் விளையாட்டு வீரர்கள் என முக்கிய பிரமுகர்கள் வந்தால் விஐபி தரிசன வரிசையில் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

முன்னாள் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு நேற்று இரவு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்தார்.

வடக்கு கோபுரம் வழியாக கோயில் உள்ளே வருகை தந்த அவர் கோயிலில் கொடிமரம் அருகே சென்று சம்பந்த விநாயகரை வழிபட்டு வைகுந்த வாயில் வழியாக உள்ளே சென்று சண்டிகேசுவரர் சன்னதி வழியாக சென்று அண்ணாமலையாரை வழிபட்டார்.

அண்ணாமலையார் கோயிலில் முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபு சாமி தரிசனம்...#Sekarbabu | #Thiruvannamalai | #DMK | #PuthiyathalaimuraiTV pic.twitter.com/jdKFEfya6w

— PttvOnlinenews (@PttvNewsX) September 13, 2026

அதனைத் தொடர்ந்து வைகுந்த வாயில் வழியாக நேரடியாக விஐபி வரிசையில் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்ய அமைச்சர் காத்திருந்தார்.

ஆனால் அங்கு கோயில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் சிறிது நேரம் காத்திருந்த அவர் கியூ லைன் வழியாக சென்று மற்றொரு கேட்டின் வழியாக உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார்.

நடிகர் நடிகைகள் மற்றும் தொழிலதிபர்கள் வெளி மாநில பக்தர்கள் பலர் விஐபி தரிசனம் செய்யக்கூடிய நிலையில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விஐபி தரிசனம் மறுக்கப்பட்டு சாதாரண வரிசையில் நேற்று சாமி தரிசனம் செய்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM விஜயை விமர்சித்து பேசினாரா விஜய் சேதுபதி? 'தலைவனுக்கான பண்பில்லை..' வைரலாகும் வீடியோ!