Politics · 1 outlet covered this

மற்ற மாநிலங்களை விட மின்வெட்டு குறைவு: அமைச்சர் செங்கோட்டையன் கருத்து

How outlets told it

The Hindu Tamil6512h ago

மற்ற மாநிலங்களை விட மின்வெட்டு குறைவு: அமைச்சர் செங்கோட்டையன் கருத்து

Read at The Hindu Tamil
மற்ற மாநிலங்களை விட மின்வெட்டு குறைவு: அமைச்சர் செங்கோட்டையன் கருத்து
Photo: The Hindu Tamil

Updated on: 13 Sep 2026, 10:07 pm1 min readஈரோடு: அண்டை மாநிலங்​களு​டன் ஒப்​பிடும்​போது தமி​ழ​கத்​தில் மின்​வெட்டு குறை​வாக உள்​ளது என அமைச்​சர் செங்​கோட்டையன் தெரி​வித்​தார். ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மேலை நாடு​களுக்​குச் சென்று தொழில் முதலீட்​டாளர்​களைச் சந்​தித்​து, தமி​ழ​கத்​தில் பல்​வேறு தொழில்​களைத் தொடங்​கு​வதற்​கான முதலீடு​களை ஈர்க்​கும் நோக்​கில் முதல்​வர் பயணம் மேற்​கொண்​டுள் ளார். தாராபுரம் இடைத்​தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர் 16-ம் தேதி மனு​தாக்​கல் செய்​வார். வெற்றி வாய்ப்பு பிர​காச​மாக உள்​ளது. விமர்​சனங்​களைத் தாங்​கிக்​கொள்​ளும் சக்தி எங்​களுக்கு உள்​ளது. அதேவேளை​ விமர்​சனங்​கள் நேர்​மை​யான​தாக இருக்க வேண்​டும். மக்​களின் கோரிக்​கை​களை ஏற்​று, பரந்​தூர் விமான நிலை​ய திட்டத்தை முதல்​வர் ரத்து செய்​துள்​ளார். தமி​ழ​கத்​தில் மின்​வெட்​டைக் குறைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது காற்​றாலை மின்​சா​ரம் முடங்​கி​யுள்​ளது. இருப்​பினும், அண்டை மாநிலங்​களு​டன் ஒப்​பிடும்​போது தமி​ழ​கத்​தில் மின்​வெட்டு குறை​வாக உள்​ளது. இவ்​வாறு தெரி​வித்​தார்​.