முழுமையாக மின்மயமாக்கப்பட்ட தெற்கு ரயில்வே போக்குவரத்து
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
முழுமையாக மின்மயமாக்கப்பட்ட தெற்கு ரயில்வே போக்குவரத்து
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புசென்னைமுழுமையாக மின்மயமாக்கப்பட்ட தெற்கு ரயில்வே போக்குவரத்துதெற்கு ரயில்வே போக்குவரத்து முழுமையாக 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நிறைவாக பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் தடம் 71 கி. மீ. பாதை மின்மயமாக்கல் நடைபெற்ாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்புப் படம்Published On :11 செப்டம்பர் 2026, 1:44 am ISTதெற்கு ரயில்வே போக்குவரத்து முழுமையாக 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நிறைவாக பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் தடம் 71 கி. மீ. பாதை மின்மயமாக்கல் நடைபெற்ாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வே மண்டலத்தில் 5,068 கி. மீ. தொலைவு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ரயில் வழித்தடங்கள் அனைத்தும் தற்போது மின்மயமாக்கப்பட்டுள்ளது. இது அந்த மண்டலத்தின் வரலாற்றில் முக்கிய மைல். தெற்கு ரயில்வேயில் பல்வேறு கட்டங்களாக மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அந்தப் பணியின் நிறைவாக அண்மையில் பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையேயான 71 கி. மீ. தொலைவு மின்மயமாக்கல் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. அந்தப் பணியை தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை மின் பொறியாளா் கணேஷ் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தெற்கு ரயில்வேயில் கடந்த 1931 மே 11-ஆம் தேதி மும்பையில் ரயில் பாதை மின்மயமாக்கல் பணி தொடங்கப்பட்டது. அதேபோல், சென்னையில் கடற்கரை-தாம்பரம் இடையே கடந்த 1968-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போதைய முழுமையான மின்மயமாக்கலால் டீசலில் இயங்கும் ரயில் என்ஜின்களுக்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடு தடுக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் அனைத்தும் தங்கு தடையின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
