பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து... அதிகாலையில் சவுக்கு சங்கர் கைது!
Read at VikatanCrime and courts · 1 outlet covered this
பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து... அதிகாலையில் சவுக்கு சங்கர் கைது!
How outlets told it

காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.Published:04 May 2024 10 AMUpdated:04 May 2024 10 AMசவுக்கு சங்கர்சவுக்கு சங்கர் சமூகவலைதளங்களில் தொடர்ந்து, அரசியல் ரீதியாகவும் அரசு தொடர்பாகவும் தன் கருத்துகளை பதிவு செய்து வருபவர். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்து, முக்கியமாக பெண் காவலர்கள் குறித்து அவதூறான வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக புகார் எழுந்தது. சவுக்கு சங்கர் இதுதொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீஸ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இன்று அதிகாலை 4 மணியளவில் தேனி மாவட்டத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீஸ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சங்கரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். விபத்துகோவை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அவர்கள் வந்த வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் போலீஸ் மற்றும் சவுக்கு சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்து சென்றனர். கோவைகோவை சைபர் க்ரைம் போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் திட்டமிட்டுள்ளனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88Loading quiz.......
