சாம்பியன்ஸ் லீக்: முதல் போட்டியில் 16 அணிகள் வெற்றி, 4 அணிகள் டிரா!
Read at DinamaniSports · 1 outlet covered this
சாம்பியன்ஸ் லீக்: முதல் போட்டியில் 16 அணிகள் வெற்றி, 4 அணிகள் டிரா!
How outlets told it

ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பயர்ன் மியூனிக் அணி போடோ/க்ளிமிட் அணியை 5-0 என வீழ்த்தியது. இதில் ஜமால் முசியாலா 47ஆவது நிமிஷத்திலும் ஹாரி கேன் 61ஆவது நிமிஷத்திலும் அல்போன்ஸோ டேவிஸ் 77ஆவது நிமிஷத்திலு கோல் அடித்தார்கள். நட்சத்திர வீரர் மைக்கேல் ஒலிஸே 83, 90+2ஆவது நிமிஷத்தில் 2 கோல்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார். அடுத்த போட்டியில் ஆர்சி லென்ஸ் அணி 3- 2என்ற கோல் கணக்கில் ஸ்லாவியா பிராக் அணியை வீழ்த்தியது. இதில் 49ஆவது நிமிஷத்தில் ஸ்லாவியா அணியின் மிகுலாஸுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. அடுத்த போட்டியில் முதல்முறையாக 70 ஆண்டுகால சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடிய கோமா 1907 அணி 4-1 என வரலாற்று வெற்றியைப் பெற்றது. அடுத்த போட்டியில் ரெட் டெவில்ஸ் எனப்படும் மான்செஸ்டர் யுனைடெட் 4-0 என்ற கோல் கணக்கில் ஷபா அணியை வீழ்த்தியது. ரோமா - ஃபெனர்பாகே, பிஎஸ்வி - எஃப்சி ஷக்தார் டொனெட்ஸ்க் போட்டிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தன. மொத்தம் 36 அணிகளில் டாப் 8 இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளிப் பட்டியலில் 9-24 வரை இடம்பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப்ஸ் போட்டிகளில் விளையாடி அதிலிருந்து 8 அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகுமென்பது கடந்த சீசன் முதல் உருவாக்கப்பட்ட புதிய நடைமுறை என்பதும் கவனிக்கத்தகது. சாம்பியன்ஸ் லீக் பட்டியல் 1. பிஎஸ்ஜி 2. பயர்ன் மியூனிக் 3. பார்சிலோனா4. மான்செஸ்டர் யுனைடெட்5. கோமோ 19076. எஸ்சிபி7. விஎஃப்பி ஸ்டட்கார்ட்8. மான்செஸ்டர் சிட்டி
