Lifestyle · 1 outlet covered this

வாக்கிங் போகும்போது இந்த 5 விஷயங்களை செய்தால், எடையை வேகமாகக் குறைக்கலாம்!

How outlets told it

News18 Tamil653d ago

வாக்கிங் போகும்போது இந்த 5 விஷயங்களை செய்தால், எடையை வேகமாகக் குறைக்கலாம்!

Read at News18 Tamil
வாக்கிங் போகும்போது இந்த 5 விஷயங்களை செய்தால், எடையை வேகமாகக் குறைக்கலாம்!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Nivetha Jnews18-tamilLast Updated:Sep 11, 2026 7:36 AM ISTஉடல் எடையை வேகமாக கரைக்க உதவும், 5 எளிமையான நடைப்பயிற்சி முறைகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.1/7உடல் எடையைக் குறைப்பதில் மிக எளிய மற்றும் மிகச் சிறந்த பயிற்சியாக இருப்பது, நடைப்பயிற்சி. ஆனால், பலரும் ‘எவ்வளவு நடந்தாலும் எடை குறையவே இல்லை’ என்று சொல்வதுண்டு. அதற்குக் காரணம், சாதாரணமாக உலாவுவது போல நடப்பது உடல் எடையை வேகமாக குறைக்க உதவாது. எடையைக் குறைப்பதற்கென்றே சில குறிப்பிட்ட முறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.2/7சுறுசுறுப்பான நடை: சாதாரணமாக நடப்பதைத் தவிர்த்து, சற்று வேகமான அதாவது 'பிரிஸ்க் வாக்கிங்' செய்ய வேண்டும். சரியாகச் சொன்னால், நீங்கள் நடக்கும்போது உங்களால் பேச முடிய வேண்டும், ஆனால் பாட்டுப் பாட முடியாத அளவுக்கு வேகம் இருக்க வேண்டும். இந்த வேகத்தில் நடக்கும்போதுதான் உடலின் இதயத் துடிப்பு அதிகரித்து, கொழுப்பு எரியும் நிலைக்கு உடல் செல்கிறது.3/7இடைவெளி பயிற்சி முறை (Interval Walking): ஒரே வேகத்தில் தொடர்ச்சியாக நடப்பதற்குப் பதிலாக, வேகத்தை மாற்றி மாற்றி நடக்க வேண்டும். உதாரணமாக, 3 நிமிடங்கள் மிதமான வேகத்தில் நடந்தால், அடுத்த 1 நிமிடம் உங்களால் முடிந்தவரை மிக வேகமாக ஓடுவது போல நடக்க வேண்டும். இதையே மாற்றி மாற்றி 30-40 நிமிடங்கள் செய்ய வேண்டும். இந்த முறை உடலின் வளர்சிதை மாற்றத்தை மிக வேகமாக தூண்டி, சாதாரண நடைப்பயிற்சியை விட இரு மடங்கு கலோரிகளை எரிக்க உதவுகிறது.4/7எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 5 நாட்களாவது, தினமும் 45 முதல் 60 நிமிடங்கள் நடக்க வேண்டும். ஆரம்பத்தில் 20 நிமிடங்களில் தொடங்கி, மெதுவாக நேரத்தை அதிகரிக்கலாம். இப்படி நடக்கும்போது, முதல் 20 நிமிடங்களில் உடல் தனக்குத் தேவையான ஆற்றலை நாம் சாப்பிட்ட உணவில் உள்ள குளுக்கோஸிலிருந்து எடுக்கும். 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நடக்கும் போதுதான், உடலில் தேங்கியுள்ள கொழுப்பு கரையத் தொடங்கும்.5/7இத்துடன், நடக்கும் போது தரையைப் பார்க்காமல் நேராக நிமிர்ந்து பார்த்து நடக்க வேண்டும். தோள்களைத் தளர்த்தியாக வைத்து, முழங்கைகளை 90 டிகிரி கோணத்தில் மடக்கி, நடையின் வேகத்திற்கு ஏற்ப முன்னும் பின்னும் பலமாக வீசி நடக்க வேண்டும். கைகளை வீசி நடக்கும்போது மேல் உடலின் தசைகளும் வேலை செய்கின்றன. இது ஒட்டுமொத்த உடலின் வடிவத்தை சீராக்க உதவுவதோடு, கூடுதல் கலோரிகளையும் எரிக்கும்.6/7இவை அனைத்தையும் விட முக்கியம், நாம் இப்போது பார்க்கப் போவது. நடைப்பயிற்சி செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். நடந்து முடித்தவுடன் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளையோ, குளிர்பானங்களையோ தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முட்டை, சுண்டல் அல்லது சியா விதை கலந்த தண்ணீர் போன்ற ஆரோக்கியமான புரோட்டீன் உணவுகளைச் சாப்பிடலாம். எவ்வளவு தூரம் நடந்தாலும், நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவு அதிகமாக இருந்தால் எடை குறையாது. எனவே, உணவுக்கட்டுப்பாடும் இதனுடன் மிக முக்கியம்.7/7பொறுப்புத் துறப்பு: இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

வாக்கிங் போகும்போது இந்த 5 விஷயங்களை செய்தால், எடையை வேகமாகக் குறைக்கலாம்! · Snashd