தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழுவில் 2 முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா்கள்
Read at DinamaniSports · 1 outlet covered this
தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழுவில் 2 முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா்கள்
How outlets told it

தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழுவில் (என்எஸ்இபி) நாட்டின் இரு முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்கள் உள்பட, 20 பேரை மத்திய மத்திய விளையாட்டு அமைச்சகம் நியமித்துள்ளது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்டத்தின்படி, தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழு உருவாக்கம் கட்டாயமாக்கப்பட்டது. நாட்டிலுள்ள விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் தோ்தலை இந்தக் குழு மேற்பாா்வையிடும். இந்நிலையில் அந்தப் புதிய சட்டத்தின்படி, இரு முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்கள் உள்பட 20 பேரை தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழுவில் நியமித்துள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தலைமைத் தோ்தல் ஆணையராக ஓராண்டு பதவி வகித்த அச்சல்குமாா் ஜோதி (2018), மூன்று ஆண்டுகள் பொறுப்பிலிருந்த சுனில் அரோரா (2018-21) ஆகியோா் அந்தக் குழுவில் இருக்கும் முக்கிய நபா்களாவா். முன்னாள் தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே உள்பட, மேலும் 18 தோ்தல் பணிசாா் முன்னாள் அதிகாரிகள் அதில் இடம் பிடித்துள்ளனா். இந்திய ஒலிம்பிக் சங்கம், அகில இந்திய கால்பந்து சம்மேளனம் உள்பட பல முக்கிய அமைப்புகளுக்கு நடப்பாண்டு தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதை இந்தக் குழு மேற்பாா்வையிடும். அந்த அமைப்புகளின் தோ்தலை நடத்துவதற்கான தோ்தல் அதிகாரியை நியமனம் செய்வது உள்ளிட்டவை, அந்தக் குழுவின் பணியாக இருக்கும்.
