Education and jobs · 1 outlet covered this

யுஜிசி நெட் தோ்வு 2026: மறுதேர்வு பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியீடு

How outlets told it

Dinamani653d ago

யுஜிசி நெட் தோ்வு 2026: மறுதேர்வு பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியீடு

Read at Dinamani
யுஜிசி நெட் தோ்வு 2026: மறுதேர்வு பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியீடு
Photo: Dinamani

புது தில்லி: யுஜிசி-நெட் தேர்வு ஜூன் 2026 ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான மறுதேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 3 பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு வகையான பிழைகள் இருப்பதாகப் பெறப்பட்ட புகாா்களை தொடர்ந்து, மேற்கண்ட மூன்று பாடங்களுக்கான மறுதேர்வை என்டிஏ அறிவித்தது. அதன்படி, ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகள் செப்.9-ஆம் தேதியும், சமூகவியல் பாடத்திற்கான தேர்வு செப்.10 ஆம் தேதியும் நடைபெற்றன. இந்த நிலையில், மறுதேர்வு நடைபெற்ற ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை என்டிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தேர்வர்கள் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபனைகளை அதிகாரப்பூர்வ யுஜிசி-நெட் இணையதளம் வழியாக ஆன்லைனில் செப்.13 தேதி வரை தெரிவிக்கலாம். ஆட்சேபனை தெரிவிக்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் உரிய ஆவணச் சான்றுகளைத் தேர்வர்கள் இணைக்க வேண்டும். தேர்வர்கள் விடைக்குறிப்பு மற்றும் ஆட்சேபனை தொடா்பான தகவல்களுக்கு அதிகாரப்பூா்வ இணையதளம் மற்றும் சரிபாா்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே நம்புமாறு என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.