Politics · 1 outlet covered this

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்; முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்?

How outlets told it

Daily Thanthi9944h ago

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்; முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்?

Read at Daily Thanthi
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்; முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்?
Photo: Daily Thanthi

Published on: 12 Sep 2026, 2:43 pmசென்னை, தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் செய்ய முதல்-அமைச்சர் விஜய் வருகிறார்: த. வெ. க. வேட்பாளர் சத்தியபாமா தகவல்எம். எல். ஏ. பதவி ராஜினாமாகடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அ. தி. மு. க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்தியபாமா. பின்னர் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக அ. தி. மு. க. வில் இருந்து விலகிய அவர், தனது எம். எல். ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அவருக்கு, தற்போது நடைபெற உள்ள தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட த. வெ. க. தலைமை வாய்ப்பளித்துள்ளது. பேட்டிஇந்தநிலையில், தாராபுரம் தொகுதியில் த. வெ. க. சார்பில் போட்டியிடும் சத்தியபாமா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெற்றி உறுதிமக்களுக்கான நல்லாட்சியை வழங்க துடிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் எனக்கு மீண்டும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சி தலைமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொகுதி மக்களின் தேவைகளையும், குறைகளையும் நான் நன்கு அறிவேன். தாராபுரம் தொகுதி மக்கள் என் மீது எப்போதும் மிகுந்த பாசமும், நம்பிக்கையும் வைத்துள்ளனர். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது ஏற்கனவே மக்களால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. குதிரை பேரமும் நடைபெறவில்லைஅ. தி. மு. க. வில் நிலவி வரும் உட்கட்சி பூசல்கள், அக்கட்சி தலைமையின் தவறான முடிவுகள் மற்றும் தி. மு. க. கூட்டணியின் மீதான கருத்து வேறுபாடு காரணமாகவே நான் அங்கிருந்து விலகினேன். மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். எனது இந்த முடிவில் எந்தவித குதிரை பேரமும் நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகள் என் மீது உண்மைக்கு புறம்பான வதந்திகளை பரப்புவதையே வழக்கமாக கொண்டுள்ளன. தி. மு. க. கூட்டணியின் மக்கள் விரோத போக்கு காரணமாகவே மக்கள் நலன் கருதி இந்த இயக்கத்தில் இணைந்தேன். ஆட்சியில் குளறுபடிஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ. தி. மு. க. ஆட்சியில் எவ்வித சாதனைகளும் நிகழ்த்தப்படவில்லை. அவர்களின் தன்னிச்சையான முடிவுகளால் நிர்வாகத்தில் பல குளறுபடிகளே ஏற்பட்டன. ஆனால், எங்கள் த. வெ. க. தலைமை மிகவும் நேர்மையாகவும், வெளிப்படை தன்மையோடும் செயல்பட்டு வருகிறது. விஜய் பிரசாரம்கடந்த தேர்தலில் நான் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தேன். தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு மக்களிடையே எழுந்துள்ள சிறப்பான வரவேற்பால், இந்த முறை அதைவிட கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெறுவது உறுதி. விரைவில் த. வெ. க. தலைவர் விஜய், எனக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தாராபுரத்திற்கு வரவுள்ளார். இவ்வாறு த. வெ. க. வேட்பாளர் சத்தியபாமா கூறினார்.