ஜங்கலாபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் நேரில் ஆய்வு
Read at DinamaniEducation and jobs · 1 outlet covered this
ஜங்கலாபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் நேரில் ஆய்வு
How outlets told it

திருப்பத்தூா் மாவட்டம், ஜங்கலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழகம் முழுவதும் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வரும் செப். 17-ஆம் தேதி முதல் பெருந்தலைவா் காமராஜா் உணவு திட்டம் மூலம் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம், ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஜங்காலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, மாணவா்களுக்கு வழங்கப்படும் காமராஜா் உணவு திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் நல்லசிவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, ஜங்காலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தையும் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தமிழரசி, திட்ட இயக்குநா் விஜயகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இளம்பரிதி, ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா், தலைமையாசிரியா் மேகநாதன் உள்பட அதிகாரிகள் பலா்கலந்து கொண்டனா்.
