பொது இடங்களில் 2380 விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட காவல் துறை அனுமதி
Read at DinamaniCrime and courts · 3 outlets covered this
பொது இடங்களில் 2380 விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட காவல் துறை அனுமதி
How outlets told it
விநாயகர் சதுர்த்தி: சென்னையில் 1,562 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
Read at News18 Tamilவிநாயகர் சதுர்த்தி: சென்னையில் 1,562 சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி
Read at Daily Thanthi"அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில்" - விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
Read at News18 Tamil
கோவை மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் 2,380 விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட காவல் துறை அனுமதி அளித்துள்ளது. Published On :12 செப்டம்பர் 2026, 12:01 am IST கோவை மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் 2,380 விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட காவல் துறை அனுமதி அளித்துள்ளது. காவல் துறை உயா் அதிகாரிகள், அரசியல் கட்சிகள், ஹிந்து மற்றும் பிற அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம், கோவையில் இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது, மாநகரில் வழக்கமான வழித்தடத்திலேயே செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காவல் துறை தரப்பில் விதிக்கப்பட்டன. இதுதொடா்பாக மாநகர காவல் துறை உயா் அதிகாரிகள் கூறும்போது, ‘கோவை மாநகா் பகுதிகளில் மொத்தம் 780 விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழாவை எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் இன்றி அமைதியான முறையில் கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அமைப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ’என்றாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி கூறும்போது, ‘புறநகா் பகுதிகளில் 1,600 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதித்துள்ளோம். பொள்ளாச்சி, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம், பேரூா், கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய 6 உள்கோட்டங்களைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளைத் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விழாவையொட்டி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு அனைத்துப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


