எண்ணெய் வித்துப் பண்ணையில் கருவேல மரங்கள் அகற்றம்
Read at Dinamani2 outlets covered this
எண்ணெய் வித்துப் பண்ணையில் கருவேல மரங்கள் அகற்றம்
How outlets told it
சென்னையில் நேற்று 33.22 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றம்..!
Read at Daily Thanthi
செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புகடலூர்எண்ணெய் வித்துப் பண்ணையில் கருவேல மரங்கள் அகற்றம் நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் நடைபெறும் சீமை கருவேல மரங்கள். நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் நடைபெறும் சீமை கருவேல மரங்கள்.Published On :12 செப்டம்பர் 2026, 6:59 am IST கடலூா் மாவட்டம், நெய்வேலி மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலூா் மாவட்டம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது . அதன்படி, கடலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் வசந்தா உத்தரவின்பேரில், நெய்வேலி மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் தரிசாக உள்ள 100 ஏக்கா் நிலப்பகுதிகளில் காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இப்பணியை வேளாண்மை துணை இயக்குநா் (மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்) கதிரேசன் மற்றும் பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினா். இந்த ஆய்வின்போது, நெய்வேலி மாநில எண்ணெய் வித்துப் பண்ணையின் பண்ணை மேலாளா்கள் தில்லைக்கரசி, சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்

