Cinema and entertainment · 1 outlet covered this

OTT Spot : ஹாலிவுட் க்ரைம் த்ரில்லர்களை பார்ப்பவரா நீங்கள்? ஜீ 5-இல் இந்த 5 படங்களை மீஸ் பண்ணிடாதீங்க..

How outlets told it

News18 Tamil652d ago

OTT Spot : ஹாலிவுட் க்ரைம் த்ரில்லர்களை பார்ப்பவரா நீங்கள்? ஜீ 5-இல் இந்த 5 படங்களை மீஸ் பண்ணிடாதீங்க..

Read at News18 Tamil
OTT Spot : ஹாலிவுட் க்ரைம் த்ரில்லர்களை பார்ப்பவரா நீங்கள்? ஜீ 5-இல் இந்த 5 படங்களை மீஸ் பண்ணிடாதீங்க..
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:MusthakLast Updated:Sep 12, 2026 2:02 PM ISTZEE 5 ஓடிடி தளத்தில் உள்ள தரமான 5 ஹாலிவுட் க்ரைம் த்ரில்லர் படங்கள் குறித்து இந்த பகுதியில் பார்க்கலாம். 1/51. நார்மல் (Normal - 2026) - யூலிசஸ் (பாப் ஓடன்கிர்க்) என்பவர் அமைதியான வாழ்க்கையைத் தேடி ஒரு சிறிய நகரத்திற்கு போலீசாக வருகிறார். ஆனால், அங்கு நடக்கும் ஒரு வங்கியின கொள்ளை சம்பவம் அவரது வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றுகிறது. ஊழல் அதிகாரிகள், குற்றவாளிகள் மற்றும் யாகுசா (Yakuza) கும்பலுக்கு இடையே சிக்கும் யூலிசஸ், அதிலிருந்து தப்பிக்க மொய்ரா (லெனா ஹீடே) என்பவருடன் கைகோர்க்கிறார். ஜான் விக் படப் பாணியிலான அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய க்ரைம் கதை இது.2/52. யூ வேர் நெவர் ரியலி ஹியர் (You Were Never Really Here) - காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் தொழிலைச் செய்யும் ஜோ (ஜோவாகின் ஃபீனிக்ஸ்), சக்திவாய்ந்த அரசியல்வாதியின் மகளான நினாவைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்கிறார். கடத்தப்பட்ட சிறுமியைக் மீட்கும் முயற்சியில், உயர்மட்ட அரசியல் சதித்திட்டங்கள் வெளிவருகின்றன. கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ஜோவாகின் ஃபீனிக்ஸின் மிரட்டலான நடிப்பில் உருவான ஒரு தீவிரமான த்ரில்லர் திரைப்படமாகும்.3/53. மரோடர்ஸ் (Marauders) - முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தொடர் வங்கி கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். இந்த வங்கிகள் அனைத்தும் ஊழல் நிறைந்த தொழிலதிபர் ஜெஃப்ரி ஹூபர்ட்டுக்கு (புரூஸ் வில்லிஸ்) சொந்தமானவை. எஃப். பி. ஐ ஏஜென்ட் மாண்ட்கோமரி (கிறிஸ்டோபர் மெலோனி) மற்றும் அவரது குழுவினர் இந்த வழக்கைக் கையாள்கின்றனர். கொள்ளையர்கள் பணத்திற்காக மட்டும் இந்தத் திருட்டைச் செய்யவில்லை; கடந்த காலத்தில் நடந்த ஒரு துரோகத்திற்குப் பழிவாங்கவே இதைச் செய்கிறார்கள் என்பதை இன்வெஸ்டிகேஷன் வெளிப்படுத்துகிறது.4/54. கிரிமினல் ஆக்டிவிட்டிஸ் (Criminal Activities) - நான்கு நண்பர்கள் செய்த முதலீடு தோல்வியில் முடிகிறது. அவர்கள் இழந்த பணம் கொடூரமான பார்ட்னரான எடிக்கு (ஜான் டிராவோல்டா) சொந்தமானது எனத் தெரியவருகிறது. கடனை அடைக்க, எடி அவர்களுக்கு ஒரு ஆபத்தான வேலையைக் கொடுக்கிறான். எதிரி கும்பலின் உறுப்பினரைக் கடத்த வேண்டும். ஆனால் திட்டம் எதிர்பாராத விதமாக மாறி, அந்த நண்பர்களைப் பேரபாயத்தில் தள்ளுகிறது.5/55. நாக்ஸ் கோஸ் அவே (Knox Goes Away)- தொழில்முறை கொலையாளியான ஜான் நாக்ஸுக்கு (மைக்கேல் கீட்டன்) நினைவாற்றலைப் பாதிக்கும் அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இந்நேரத்தில், அவருடைய மகன் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு உதவி தேடி வருகிறான். நினைவாற்றல் முழுமையாக இழப்பதற்குள், காவல்துறையிடம் இருந்து தன் மகனைக் காப்பாற்ற நாக்ஸ் போடும் வியூகமே இக்கதை. மைக்கேல் கீட்டன் இயக்கி நடித்த இதில் அல் பாசினோவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.