Cinema and entertainment · 1 outlet covered this

Siragadikka Aasai | மீண்டும் மனோஜ் வீட்டிற்கு வந்த ரோகிணி.. ஆரத்தி எடுத்த விஜயா.. இனி என்ன நடக்கும்?

How outlets told it

News18 Tamil654d ago

Siragadikka Aasai | மீண்டும் மனோஜ் வீட்டிற்கு வந்த ரோகிணி.. ஆரத்தி எடுத்த விஜயா.. இனி என்ன நடக்கும்?

Read at News18 Tamil
Siragadikka Aasai | மீண்டும் மனோஜ் வீட்டிற்கு வந்த ரோகிணி.. ஆரத்தி எடுத்த விஜயா.. இனி என்ன நடக்கும்?
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Anupriyam KLast Updated:Sep 10, 2026 10:45 AM ISTSiragadikka Aasai | முத்துவும் மீனாவும் ரோகிணி பற்றி பாட்டியிடம் பொய் சொல்கின்றனர். பிறகு மனோஜ் ரோகிணியை வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் என்ன பிரச்சனை எல்லாம் வரபோகுதோ என்று பார்க்கலாம்.1/6சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகிணி மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டால் என்னாகும் என்று நினைத்த முத்துவும் மீனாவும், பாட்டியிடம் உண்மையை சொல்லாமல் வேறு ஒரு கதையை உருவாக்குகின்றனர். அதாவது, மனோஜ் யாருக்கும் தெரியாமல் ரோகிணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக பாட்டியை நம்ப வைக்கின்றனர்.2/6இதைக் கேட்டதும் கோபமடையும் பாட்டி, உடனே மனோஜை அழைத்து அவருடைய கன்னத்தில் அறைந்து, தனக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டது ஏன் என்று கேட்கிறார். இதனால் மனோஜ் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். தான் ஏற்கனவே செய்திருக்கும் திருமண விஷயம் பாட்டிக்கு தெரிந்துவிட்டதோ என்ற பயமும் அவருக்கு வருகிறது.3/6கனகா பற்றிய விஷயம் தெரிந்துவிட்டது என மனோஜ் உண்மையை சொல்ல முயற்சிக்கும் போது, முத்து ரோகிணியுடன் தனியாக வீடு எடுத்து இருக்கேல அதை தான் சொன்னோம் என முத்து கூறிவிடுகிறார். ஓ ரோகிணியா என மனோஜும் அப்பாடா என நிம்மதியடைகிறார். பிறகு பாட்டியோ உடனே ரோகிணியை வீட்டிற்கு அழைத்து வா என சொல்கிறார்.4/6தொடர்ந்து முத்துவை சந்திக்க வந்த சத்யா, நடந்த விஷயத்தை பற்றி பேசி இதையெல்லாம் மனசுல வைத்துகொள்ளாமல் தயவு செய்து திருமண வரவேற்பிற்கு வந்துவிடுங்கள் என்று கூறுகிறார். மேலும் சிந்தாமணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே அவங்க எந்த கெட்ட எண்ணத்திலும் அப்படி செய்யவில்லை, உங்களுக்கு பிடிச்ச ஆடை எடுத்து கொள்ள வேண்டும் என்றுதான் பணம் கொடுத்திருப்பாங்க என்று நியாப்படுத்துகிறார்.5/6மேலும் நீங்க இல்லைனா இந்த இடத்திற்கு நான் வந்திருக்க முடியாது, நீங்க எல்லாரும் இந்த நல்ல விஷயத்தில் என் கூட இருக்கனும் என்று ஆசைப்படுவதாக முத்துவிடம் கூறுகிறார். உடனே முத்துவோ, சரி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி சத்யாவை அனுப்பி வைக்கிறார். பிறகு சிந்தாமணியின் விஷ வேலையை பற்றி நினைத்து வருந்துகிறார்.6/6இதை தொடர்ந்து நாளைக்கான புரோமோவில், ரோகிணியும் மனோஜும் வீட்டிற்கு வரவே விஜயா ஆரத்தி எடுத்து வரவேற்கிறார். பாட்டி சொல்லை தட்ட முடியாததால் விஜயாவும் இந்த செயலை செய்ய வேண்டியதாக ஆகிறது. மீண்டும் முதலில் இருந்து கதை ஆரம்பமாகி வருவதால் இதனால் என்ன நடக்கபோகிறது என்று பார்க்கலாம்.