Quarterly Exam 2026: பள்ளி மாணவர்களுக்கு செப். 16, 17 தேர்வு ரத்து... காலாண்டு தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்
Read at News18 TamilEducation and jobs · 1 outlet covered this
Quarterly Exam 2026: பள்ளி மாணவர்களுக்கு செப். 16, 17 தேர்வு ரத்து... காலாண்டு தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubeReported by:YuvathikaPublished by:pradeepa mLast Updated:Sep 13, 2026 1:15 PM ISTQuarterly Exam 2026| பள்ளி காலாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.1/5மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.2/5இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது செப்டம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நாட்களில் நடைபெற இருந்த தேர்வுகளை மாற்றி அமைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.3/5அதன்படி, செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற இருந்த காலாண்டு தேர்வு செப்டம்பர் 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் செப்டம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெறும் வகையில் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தயாளன் பிறப்பித்துள்ளார்.4/5இதனால் மதுரை மாவட்டத்தில் காலாண்டு தேர்வுக்கான அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாற்றப்பட்ட தேதிகளுக்கு ஏற்ப மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.5/5மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு ஏற்ப இந்த தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் தவிர, மற்ற தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
