பிரிக்ஸ் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த விருந்தில் இடம் பெற்ற தென்னிந்திய உணவுகள்
Read at Daily ThanthiPolitics · 1 outlet covered this
பிரிக்ஸ் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த விருந்தில் இடம் பெற்ற தென்னிந்திய உணவுகள்
How outlets told it

டெல்லியில் நேற்று நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தில் சிறுதானியங்களை மையமாக கொண்ட, முற்றிலும் இந்திய பாணியிலான சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், தென்னிந்திய மசாலாப் பொருட்களில் வதக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் பொரியல் தேங்காய்த் துருவலுடன் வழங்கப்பட்டது.
உணவுப் பட்டியலில், புலாவ் வகைகளில் கம்பு, ரொட்டியில் சோளம் மற் றும் இனிப்பு வகையில் குதிரைவாலி என 3 வகையான சிறுதானியங்கள் இடம்பெற்றிருந்தன. தொடக்க உணவாக கடுகு, தேங்காய் மற்றும் கறிவேப் பிலை சேர்த்துத் தாளிக்கப்பட்ட, ஆவியில் வேகவைத்த கடலை மாவு உருண்டைகளைக் கொண்ட காண்ட்வி மில்லே-பியூய், கேசர் மாம்பழம், மைக்ரோ கீரைகள் மற்றும் தயிர் சாசுடன் பரிமாறப்பட்டது.
இனிப்பு வகையாக, பருவகாலப் பழங்கள் மற்றும் லேசாக அரைக்கப்பட்ட கிரீமுடன், மொறுமொறுப்பான இனிப்புப் பலகாரத்தைச் சேர்த்துத் தயாரிக் கப்பட்ட ஓல்ட் டெல்லி புரூட் கிரீம், ஜிலேபியுடன் பரிமாறப்பட்டது. பானங் களில் மாதுளைச் சாறும், இளநீரும் இருந்தன. பாரம்பரிய இசை நிகழ்ச்சி யும் நடந்தது. இந்த விருந்தில் சீன அதிபர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
