பிரதமர் மோடியுடன் பள்ளித் தோழர் திடீர் சந்திப்பு
Read at The Hindu TamilEducation and jobs · 1 outlet covered this
பிரதமர் மோடியுடன் பள்ளித் தோழர் திடீர் சந்திப்பு
How outlets told it

மும்பை / அகமதாபாத்: பிரதமர் மோடியை அவரது பள்ளித் தோழரான அஸ்கரலி வோரா சந்தித்துப் பேசினார். அப்போது தனக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி மனு அளித்தார்.
குஜராத் மாநிலம் வாத்நகரில் உள்ள பி. என். உயர்நிலைப் பள்ளியில் பிரதமருடன் ஒன்றாகப் பயின்றவர் அஸ்கரலி வோரா(81). மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்து வரும் இவர், கடந்த 8-ம் தேதி பிரதமரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தனக்குச் சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்டது குறித்துப் புகாரளித்துள்ளார்.
மும்பை பயந்தர் கிழக்கு, நவ்கர் பகுதியில் அமைந்துள்ள 2,810 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தை அஸ்கரலி சட்டப்படி வாங்கி உள்ளார். இந்நிலையில், போலி ஆவணங்களைத் தயாரித்து, ‘ஸ்வயம் பில்டர்ஸ்’ மற்றும் ‘செவன் இலவன் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் நிலத்தை ஆக்கிரமித்ததாக அஸ்கரலி குற்றம்சாட்டியுள்ளார். இதில் செவன் இலவன் நிறுவனத்துடன் பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தாவுக்குத் தொடர்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நில அபகரிப்பு தொடர்பாக காவல் துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து போராடியும் அவருக்குத் தீர்வு கிடைக்கவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்த போராட்டத்தின் முடிவில், டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அஸ்கரலி, நிலப்பறிப்பு விவகாரம் குறித்து விவரித்து சிபிஐ விசாரணை கோரினார். இதைத் தொடர்ந்து, உள்ளாட்சி நிர்வாகம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள நேரடி விசாரணைக்கு சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு இந்திய பாரம்பரிய உணவு வகைகளுடன் கலாச்சார விருந்து
