Cinema and entertainment · 1 outlet covered this

விஸ்மயா மோகன்லாலின் “துடக்கம்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

How outlets told it

Daily Thanthi997d ago

விஸ்மயா மோகன்லாலின் “துடக்கம்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Read at Daily Thanthi
விஸ்மயா மோகன்லாலின் “துடக்கம்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Photo: Daily Thanthi

விஸ்மயா மோகன்லாலின் அறிமுகப் படம்இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். குறிப்பாக மலையாள சினிமாவின் வர்த்தகத்தை உலக அளவில் கொண்டு சென்ற முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். இவரது மகள் விஸ்மயா மோகன்லால், ‘துடக்கம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். மோகன்லாலின் மகள் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான விஸ்மயா, ‘துடக்கம்’ படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால்விஸ்மயா மோகன்லால் நடித்துள்ள ‘துடக்கம்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். இப்படத்தில் மோகன்லால், ஆஷிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ரூ.41 கோடியை கடந்த வசூல்வெளியானது முதலே ‘துடக்கம்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ‘துடக்கம்’ திரைப்படம் உலகளவில் ரூ.41 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விஸ்மயாவின் முதல் படத்திற்கே கிடைத்துள்ள இந்த வரவேற்பு படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்புஇந்நிலையில், விஸ்மயா மோகன்லால் நடித்த ‘துடக்கம்’ படம் செப்டம்பர் 18ம் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.