Politics · 1 outlet covered this

திமுகவை காப்பி அடிக்கும் அதிபர் டிரம்ப்; சலுகை அறிவிப்பு குறித்து ஸ்ரீதர் வேம்பு கருத்து

How outlets told it

Dinamalar653d ago

திமுகவை காப்பி அடிக்கும் அதிபர் டிரம்ப்; சலுகை அறிவிப்பு குறித்து ஸ்ரீதர் வேம்பு கருத்து

Read at Dinamalar
திமுகவை காப்பி அடிக்கும் அதிபர் டிரம்ப்; சலுகை அறிவிப்பு குறித்து ஸ்ரீதர் வேம்பு கருத்து
Photo: Dinamalar

/செய்திகள்/உலகம்/ திமுகவை காப்பி அடிக்கும் அதிபர் டிரம்ப்; சலுகை அறிவிப்பு குறித்து ஸ்ரீதர் வேம்பு கருத்துADDED : செப் 11, 2026 07:46 AM ADDED : செப் 11, 2026 07:46 AM அ நிறம் | அளவுசென்னை: ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா, 5,000 டாலர் வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் திமுகவை காப்பி அடித்து இருப்பதாக ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலும், நம்மூர் பாணியை பின்பற்றி, 'வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் குடியரசு கட்சி வென்றால், ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா, 5,000 டாலர் அதாவது, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்று, அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் மக்கள் தொகை, 34.9 கோடியாக உள்ளது. அதில் ஓட்டளிக்க தகுதி பெற்றோர், 27 கோடி பேர். டிரம்ப்பின் அறிவிப்புபடி, 27 கோடி பேருக்கும் தலா 5,000 டாலர் வழங்கினால், அரசுக்கு 129 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இது அரசுக்கு மிகப் பெரிய சுமையாகும். இந்த அறிவிப்பு குறித்து, ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில், ''நாங்கள் இதைத் தமிழகத்தில் உருவாக்கி, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரப்பினோம். அதிபர் டிரம்ப் தற்போது திமுகவை காப்பி அடித்துள்ளார்'' என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.