கவுன்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ்..! இந்திய அணியில் இடம்பிடிப்பாரா?
Read at DinamaniSports · 1 outlet covered this
கவுன்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ்..! இந்திய அணியில் இடம்பிடிப்பாரா?
How outlets told it

இந்திய சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் (31 வயது) தற்போது கவுன்டியில் விளையாடி வருகிறார். அஸ்வின் ஓய்வுக்குப் பிறகு இவர்மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சாளர் சிறியதாவது பேட்டிங் செய்ய வேண்டுமென கௌதம் கம்பீர் நினைக்கிறார். அதனால், குல்தீப் தனது வாய்ப்புகளை இழக்கிறார். யார்க்ஷயர் அணியில் விளையாடும் குல்தீப் யாதவ் எசெக்ஸ் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் 36 ரன்கள் எடுத்து அணிக்கு உதவினார். இதனால், அந்த அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குல்தீப் யாதவ் 2017ல் அறிமுகமாகியும் இதுவரை 19 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடியுள்ளார். முன்னதாக அஸ்வின் - ஜடேஜா இருப்பார்கள்; தற்போது, வாஷிங்டன், அக்ஷர், மானவ் சுதர், சரண்ஸ் ஜெயின் உள்ளதால் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறார். இந்த 10 விக்கெட்டுகள் எடுத்த விதம் குல்தீப் யாதவ் மீது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
