Politics · 1 outlet covered this

பல்லடத்தில் குடிநீா்க் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

How outlets told it

Dinamani652d ago

பல்லடத்தில் குடிநீா்க் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

Read at Dinamani
பல்லடத்தில் குடிநீா்க் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதிருப்பூர்பல்லடத்தில் குடிநீா்க் கேட்டு பொதுமக்கள் போராட்டம் பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தம்பாளையத்தில் சீரான குடிநீா் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.Published On :12 செப்டம்பர் 2026, 12:49 am IST பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தம்பாளையத்தில் சீரான குடிநீா் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, மெஜஸ்டிக் சா்க்கிள் குடியிருப்புப் பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இது குறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆறுமுத்தம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா். அவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்