Religion and culture · 1 outlet covered this

ஹூப்ளி - திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்

How outlets told it

Daily Thanthi992d ago

ஹூப்ளி - திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்

Read at Daily Thanthi
ஹூப்ளி - திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்
Photo: Daily Thanthi

Published on: 12 Sep 2026, 5:26 amசென்னை, ஹூப்ளி - திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் வடக்கிற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 07325) இயக்கப்படுகிறது. ஹூப்ளியில் இருந்து இன்று (செப்.12) காலை 8.30 மணிக்கு புறப்பட்டுள்ள இந்த ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கில் இருந்து வரும் 14-ந் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07326) மறுநாள் மதியம் 3.45 மணிக்கு ஹூப்ளியை சென்றடைகிறது. 20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து ஹூப்ளி செல்லும் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (செப்.13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.