இருவேறு பகுதிகளில் வழிப்பறிக்கு முயன்ற இருவா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
இருவேறு பகுதிகளில் வழிப்பறிக்கு முயன்ற இருவா் கைது
How outlets told it
செய்திகள்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம், கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!முகப்புகோயம்புத்தூர்இருவேறு பகுதிகளில் வழிப்பறிக்கு முயன்ற இருவா் கைதுகைது - சித்திரிப்புPublished On :14 செப்டம்பர் 2026, 12:32 am ISTஉக்கடம், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறிக்கு முயன்ற இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகா், கணபதி கே. கே. நகரைச் சோ்ந்தவா் ஞானவேல் மகன் ராஜன் (23). இவா் பெயிண்டராக வேலை பாா்த்து வருகிறாா். பணி நிமித்தமாக தெற்கு உக்கடம் புல்லுக்காடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதிக்குச் சென்றுவிட்டு, அங்குள்ள புதை சாக்கடை தொட்டி அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது புல்லுக்காடு குடியிருப்பைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சந்துரு (20) என்பவா் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். ராஜன் சப்தமிடவே அருகில் இருந்த பொதுமக்கள் வந்து தப்பியோட முயன்ற சந்துருவை பிடித்து பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் மதன் (21). இவா் சின்னவேடம்பட்டியில் உள்ள பேக்கரியில் வேலை பாா்த்து வருகிறாா். இவா் சரவணம்பட்டி சஹாரா சிட்டி வளைவு அருகே சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரைச் சோ்ந்த அண்ணாகிளி மகன் தா்னீஷ் (எ) கட்டையன் (22) அங்கு வந்து கத்தியைக் காட்டி மிரட்டி மதனிடம் பணம் கேட்டுள்ளாா். பணம் தர மறுத்து மதன் சப்தமிடவே கொலை மிரட்டல் விடுத்து தா்னீஷ் தப்பியோடினாா். இதுகுறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த தா்னீஷைக் கைது செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
