Religion and culture · 1 outlet covered this

ஆற்காடு நவாப் தந்த நிலம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் மதச்சார்பற்ற வரலாறு..!

How outlets told it

News18 Tamil6545h ago

ஆற்காடு நவாப் தந்த நிலம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் மதச்சார்பற்ற வரலாறு..!

Read at News18 Tamil
ஆற்காடு நவாப் தந்த நிலம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் மதச்சார்பற்ற வரலாறு..!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeஆற்காடு நவாப் தந்த நிலம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் மதச்சார்பற்ற வரலாறு..!Reported by:Sundaravadivel EPublished by:Muthu KathanLast Updated:Sep 12, 2026 7:04 PM ISTமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம், இந்து மற்றும் இஸ்லாமிய மத நல்லிணக்கத்தின் ஒரு தனித்துவமான அடையாளமாகத் திகழ்கிறது. 18-ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் முகமது அலி வாலாஜா வழங்கிய நிலத்தில் உருவான இந்த தெப்பக்குளம், மொகரம் சடங்குகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.1/5மயிலாப்பூரின் கம்பீரமான அடையாளமாக விளங்கும் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம், எப்போதுமே கோயிலுடன் இணைந்த பகுதியாக இருக்கவில்லை. 18-ஆம் நூற்றாண்டில் இந்த நிலப்பகுதி ஆற்காடு நவாபுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கோயிலுக்கு எனப் பிரத்யேகமான ஒரு பெரிய குளம் தேவைப்பட்ட நிலையில், அன்றைய அர்ச்சகர்களும் பக்தர்களும் நிலம் கேட்டு ஆற்காடு நவாபை அணுகினர்.2/5இந்த வேண்டுகோளைப் பரிசீலித்த நவாப் முகமது அலி வாலாஜா, கோயில் தெப்பக்குளம் அமைப்பதற்காகத் தனக்குச் சொந்தமான நிலத்தை தாராளமாக வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தார். நவாப் முகமது அலி வாலாஜா நிலத்தை வழங்கிய போது, அதில் ஒரு சுவாரஸ்யமான சமூக உடன்பாடும் சேர்க்கப்பட்டது. இஸ்லாமிய நாட்காட்டியின் புனித மாதமான மொகரம் நாளில், ஷியா முஸ்லிம்கள் தங்களின் மதச் சடங்கிற்காக அந்தக் குளத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.3/5இந்த உடன்பாட்டின் மூலம், ஒரே நீர்நிலையுடன் ஒரு பெரிய இந்துக் கோயிலின் வழிபாட்டுச் சடங்குகளும், இஸ்லாமியர்களின் முஹர்ரம் மரபுகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான வரலாற்றுப் புள்ளி மெட்ராஸில் உருவானது. இந்த வரலாற்றின் மிக முக்கியமான மனிதநேயக் கோணம் மொகரம் சடங்கின் போது நிகழ்ந்தது. மொகரம் ஊர்வலத்தின் முடிவில், ஷியா முஸ்லிம்களின் 'பஞ்சாக்கள்' (Alam Procession) கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் முறைப்படி மூழ்கடிக்கப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டன.4/5இந்த அரிய மரபு பல தலைமுறைகளாக நீண்டகாலம் தொடர்ந்ததாக வரலாற்று ஆய்வுகளும் கூறுகின்றன. ஒரே குளம் ஒரே நேரத்தில் இந்துக்களின் புனிதத் தெப்பத் திருவிழாவிற்கும், இஸ்லாமியர்களின் சடங்கிற்கும் களமாக அமைந்தது மதங்களைக் கடந்த நல்லிணக்கத்திற்குச் சிறந்த சான்றாகும். 18-ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாபாக இருந்த முகமது அலி வாலாஜாவின் காலம், மெட்ராஸ் நகரின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானது.5/5ஒருபுறம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி மெட்ராஸை தனது வர்த்தக மையமாக மாற்றிக் கொண்டிருந்த அதே காலத்தில், மறுபுறம் உள்ளூர் அதிகார மையமாக இருந்த ஆற்காடு நவாபுகள் நகரின் சமூகக் கட்டமைப்புக்கும், முக்கிய ஆன்மீகத் தலங்களின் தேவைகளுக்கும் ஆதரவாகச் செயல்பட்டனர். மயிலாப்பூர் பகுதியில் நவாப் உருவாக்கிய இந்த நிலக் கொடை, அன்றைய மெட்ராஸின் பன்முகத் தன்மையைக் காட்டுகிறது.