கட்சியில் சேர்ந்த மூன்றே நாளில் பா.ஜ., வேட்பாளரான ஐ.ஏ.எஸ்.,
Read at DinamalarWorld · 2 outlets covered this
கட்சியில் சேர்ந்த மூன்றே நாளில் பா.ஜ., வேட்பாளரான ஐ.ஏ.எஸ்.,
How outlets told it
ஹிந்து சிறுமியருக்கு கட்டாய திருமணம் செய்யும் பாகிஸ்தான்
Read at Dinamalarட்ரை புரூட்ஸ் கொழுக்கட்டை
Read at Dinamaniராகி செவ்வாழை கொழுக்கட்டை
Read at Dinamani
ADDED : செப் 12, 2026 04:47 AM ADDED : செப் 12, 2026 04:47 AM அ நிறம் | அளவுகுவஹாத்தி: அசாமின் நகாவ்ன் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சமீபத்தில் பா. ஜ., வில் சேர்ந்த முன்னாள் ஐ. ஏ. எஸ்., அதிகாரி தேபாஷிஷ் சர்மாவை அக்கட்சி வேட்பாளராக களமிறக்கி உள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா. ஜ., ஆட்சி நடக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில், நகாவ்ன் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட பிரத்யுத் போர்டோலோய் வெற்றி பெற்றார். இவர், பா. ஜ., வில் சேர்ந்ததை அடுத்து, கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் திஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, எம். பி., பதவியை அவர் ராஜினாமா செய்தார். காலியாக உள்ள நகாவ்ன் லோக்சபா தொகுதிக்கு அக்., 6ல், இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், நகாவ்ன் லோக்சபா தொகுதி பா. ஜ., வேட்பாளராக முன்னாள் ஐ. ஏ. எஸ்., அதிகாரி தேபாஷிஷ் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார். நகாவ்ன் மாவட்ட கலெக்டராக இருந்த அவர், கடந்த 3ல் விருப்ப ஓய்வு பெற்றார். கடந்த 8ல், பா. ஜ., வில் அவர் இணைந்த நிலையில், சில நாட்களிலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும், மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டமும் பெற்ற சர்மா, 1992 அசாம் கேடரைச் சேர்ந்த ஐ. ஏ. எஸ்., அதிகாரி ஆவார். அசாமின் கவர்னராக இருந்த எஸ். கே. சின்ஹாவின் சிறப்பு அதிகாரியாகவும், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள அசாம் பவனின் குடியிருப்பு ஆணையராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.
