Cinema and entertainment · 1 outlet covered this

புதுக்கோட்டையில் மத்திய கால நெல் சாகுபடி... விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அறிவுரை..!

How outlets told it

News18 Tamil6545h ago

புதுக்கோட்டையில் மத்திய கால நெல் சாகுபடி... விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அறிவுரை..!

Read at News18 Tamil
புதுக்கோட்டையில் மத்திய கால நெல் சாகுபடி... விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அறிவுரை..!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeபுதுக்கோட்டையில் மத்திய கால நெல் சாகுபடி... விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அறிவுரை..!Reported by:Sneha VijayanPublished by:Muthu KathanLast Updated:Sep 12, 2026 7:21 PM ISTபுதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்தில் மத்திய கால நெல் இரகங்களை சாகுபடி செய்து பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.1/5புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்சம்பா பருவத்தில்  மத்திய கால நெல் இரகங்களை சாகுபடி செய்து பயன்பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.2/5புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை மத்திய கால நெல் இரகங்களை சாகுபடி செய்து பயன்பெறலாம். சம்பா பருவத்தில் விவசாயிகள் பெரும்பாலும் நீண்டகால நெல் இரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு எல் நினோ காரணமாக மழை பொழிவிற்கு ஏற்ப விவசாயிகள் 120 நாட்கள் வயதுடைய மத்திய கால நெல் இரகங்களை சாகுபடி செய்திட முன்வர வேண்டும். புதுக்கோட்டையில் மத்திய கால நெல் இரகங்களான ஆடுதுறை 54, கோ-52, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, ஏஎஸ்டி-21. பிபிடி-5204 ஆகிய இரகத்தை பயன்படுத்தலாம்.3/5ஆடுதுறை 54 இரகம் 130 முதல் 135 நாட்கள் வயதுடையது. ஒரு எக்டேருக்கு 6307 கிலோ மகசூல் கிடைக்கிறது தண்டு துளைப்பான் மற்றும் குலைநோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட இரகமாகும். கோ-52 இரகம் 130 முதல் 135 நாட்கள் வயதுடையது. ஒரு எக்டேருக்கு 6190 கிலோ மகசூல் கிடைக்கிறது. தத்துப்பூச்சிகள் குலைநோய், குலை அழுகல் நோய், பழுப்புப் புள்ளி நோய் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட இரகமாகும்.4/5மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி இரகம் 135 நாட்கள் வயதுடையது. ஒரு எக்டேருக்கு 5000 கிலோ மகசூல் கிடைக்கிறது. பச்சைதத்துப்பூச்சி மற்றும் துங்ரோ, பாக்டீரியா இலைக்கருகல் நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட இரகமாகும். ஏஎஸ்டி-21 இரகம் 120 நாட்கள் வயதுடையது. ஒரு எக்டேருக்கு 6330 கிலோ மகசூல் கிடைக்கிறது. தண்டு துளைப்பான் மற்றும் குலைநோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட இரகமாகும்.5/5மத்திய கால நெல் இரக விதைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் 200.6 மெ. டன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதில், பிபிடி 5204 இரகம் -103.5 மெ. டன். கோ-52 இரகம் 24.3 மெடன், ஏடீடி 54 இரகம் -58.3 மெடன், ஏஎஸ்டி-21 இரகம் -17 மெடன். IWP இரகம் -12 6 மெடன் இருப்பில் உள்ளது. எனவே. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சான்று பெற்ற மத்திய கால நெல் இரக விதைகளை தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.